search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சிறப்பு பயிற்சி"

    • ஏட்டுக்கல்வி மட்டுமே போதாது என்பதை அனைவரும் உணர வேண்டும்.
    • குழந்தைகளின் படைப்புத்திறனை மேம்படுத்தும்.

    தங்களுடைய குழந்தைகளின் வருங்காலம் சிறப்பாக அமைய வேண்டும் என்பதே பெற்றோர்களின் விருப்பமாக இருக்கும். இதன் காரணமாக தங்களின் பொருளாதார நிலையைத் தாண்டியும் செலவு செய்து குழந்தைகளை படிக்க வைப்பார்கள். ஆனால் குழந்தைகளின் ஆளுமைத் திறனை வளர்க்க, ஏட்டுக்கல்வி மட்டுமே போதாது என்பதை அனைவரும் உணர வேண்டும். விளையாட்டு, கைவினை மற்றும் வாழ்க்கைக்கு தேவையான பிற செயல்பாடுகளிலும் அவர்களுக்குப் போதுமான பயிற்சிகளை வழங்க வேண்டும். இதன்மூலம் குழந்தைகளின் சமூகத் திறன்களை மேம்படுத்த முடியும்.

    தன்னம்பிக்கை, குழு மனப்பான்மை விடாமுயற்சி, தலைமைத்துவம், விட்டுக் கொடுத்தல், தோல்வியை ஏற்றுக்கொள்ளும் பக்குவம் போன்ற பண்புகளை வளர்க்க முடியும். ஏட்டுப்பாடங்களால் கற்றுக்கொடுக்க முடியாத வாழ்க்கை பாடங்களை, பல்வேறு கலைகளை கற்றுக்கொள்வதன் மூலம் அறிந்துகொள்ள முடியும்.

    அந்த வகையில் ஒரு மனிதன் தன்னுடைய வாழ்நாளில் அவசியம் தெரிந்துகொள்ள வேண்டியவை என்று நமது முன்னோர்களால் வகுக்கப்பட்டவையே ஆய கலைகள்' நடனம், இசைக்கருவி மீட்டுதல், ஒப்பனை செய்தல், ஓவியம் வரைதல், சிற்பம் செதுக்குதல் என இதில் 64 வகையான கலைகள் உள்ளன. அவற்றில் இந்த கால வாழ்க்கை முறைக்கு தகுந்த சில கலைகளை குழந்தைகளுக்கு கற்றுக்கொடுப்பது பயனுள்ளதாக அமையும். அதைப் பற்றிய தகவல்கள் இதோ....

     பூ தொடுத்தல்:மலர் அலங்காரம், மலர் வடிவமைப்பு, மலர் ஓவியம் மற்றும் பூக்களால் சிற்பம் செய்தல் உள்ளிட்ட பல்வேறு வகையான தொழில்களுக்கு அடிப்படையாக இருப்பது பூத்தொடுத்தல் அல்லது பூக்கட்டுதல் ஒன்று போல உள்ள பூக்களை தேர்ந்தெடுத்து, வரிசையாக வைத்து அவற்றை மாலையாக கட்டும் செயலில், வாழ்க்கைக்குத் தேவையான பல்வேறு விஷயங்கள் உள்ளன. இதன்மூலம் கண்களுக்கும். கைகளுக்கும் இடையேயான ஒருங்கிணைப்பு மேம்படும்.

     ஓவியம் வரைதல்:

    குழந்தைகளின் படைப்பாற்றலை வளர்ப்பதற்கும். உணர்ச்சிகளை வெளிப்படுத்துவதற்கும். ஒருங்கிணைப்பு திறன்களை மேம்படுத்துவதற்கும் ஓவியக்கலை பயன்படுகிறது. குழந்தைகள் சுதந்திரமாக சவால்களை எதிர்கொள்ளவும், அவற்றுக்கான தீர்வுகளை உருவாக்கவும், தங்களது செயல்பாடுகளை மதிப்பீடு செய்யவும் ஓவியக்கலையின் மூலம் கற்றுக்கொள்ள முடியும்.

    உதாரணத்துக்கு, ஓர் ஓவியத்துக்கு எந்த நிறத்தைப் பயன்படுத்த வேண்டும். எந்தெந்த நிறங்களை எவ்வாறு கலக்க வேண்டும். ஓவியத்தில் ஏற்படும் பிழைகளை எவ்வாறு திருத்தம் செய்ய வேண்டும் என்பனவற்றை குழந்தைகள் சிந்திப்பார்கள். இது அவர்கள் வாழ்க்கையிலும் பிரச்சினைகளுக்குரிய தீர்வை கண்டறிய உதவும்.

    மண்பாண்டங்கள் செய்தல்:

    களிமண்ணைக் கொண்டு பல்வேறு பொருட்களை வடிவமைக்கும் கலையானது, குழந்தைகளின் படைப்புத்திறனை மேம்படுத்தும். களிமண்ணை பக்குவமாக கையாளும் போதுதான் அதைக் கொண்டு பொருட்களை வடிவமைக்க முடியும். மனதையும், உடலையும் சமநிலையில் வைத்து சிந்திக்க இந்தக் கலை கற்றுக்கொடுக்கிறது. குழந்தைகளின் மனதை அமைதிப்படுத்தும் ஆற்றல் களிமண்ணுக்கு உண்டு.

    மண்பாண்டங்கள் செய்வதற்கு கற்றுக்கொடுக்கும் வகுப்புகளில் கலந்துகொள்ளும் குழந்தைகள், மிகவும் அமைதியாக வடிவங்களை உருவாக்கிக் கொண்டு இருப்பதை கவனிக்க முடியும். அதேநேரம் அவர்களின் ஆற்றலும், செயலும் வேகமாக இருக்கும். இவ்வாறு சமைத்தல், தையல் நீச்சல், இல்லத்தை தூய்மையாக வைத்திருத்தல் என ஒவ்வொரு கலையும் குழந்தைகளின் ஆளுமைத்திறனை வளர்ப்பதற்கு உதவுகின்றன.

    • வட்டார வாரியாக 152 தமிழ் ஆசிரியர்களுக்கும் பொறுப்பு தமிழ் ஆசிரியர்கள் 11 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
    • அனைத்து மாணவர்களையும் தமிழில் எழுத மற்றும் படிக்க வைக்க தக்க அறிவுரைகள் வழங்கப்பட்டது.

    தென்காசி:

    தென்காசி மாவட்டம், குத்துக்கல்வலசை செயின் மேரீஸ் உயர்நிலைப் பள்ளியில் பள்ளி கல்வித்துறை சார்பில் தமிழ் ஆசிரியர்களுக்கான ஒரு நாள் சிறப்பு பயிற்சி மற்றும் பயிற்சி கட்டகம் வெயிடுதல் நிகழ்ச்சி மாவட்ட கலெக்டர் ரவிச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது.

    தென்காசி மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயின்று வரக்கூடிய மாணவ- மாணவிகளில் தமிழ் எழுத, வாசிக்க தெரியாத மாணவர்களுக்காக மாவட்ட கலெக்டர் தலைமையிலும், மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் முன்னிலையிலும் ஒவ்வொரு பள்ளியிலிருந்து ஒருங்கிணைப்பு தமிழ் ஆசிரியர்கள் மொத்தம் 152 பேர் வரவழைக்கப்பட்டு ஒவ்வொரு வட்டாரம் வாரியாக இந்த 152 தமிழ் ஆசிரியர்களுக்கும் பொறுப்பு தமிழ் ஆசிரியர்கள் 11 பேர் நியமிக்கப்பட்டு இவர்களின் செயல்பாடுகளை கவனிக்க 29 தலைமை ஆசிரியர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

    நிகழ்ச்சியில் மெல்ல கற்கும் மாணவர்களுக்கு 55 பக்கங்கள் கொண்ட புத்தகத்தை மாவட்ட கலெக்டர் வெளியிட்டார்.தொடர்ந்து மாவட்டம் முழுமையும் ஒரே மாதிரியாக இந்த மாணவர்களுக்கு நடத்தப்பட்டு மாதம் இருமுறை இந்த மாணவர்களுக்கு தேர்வும் நடத்தி அனைத்து மாணவர்களையும் தமிழில் எழுத மற்றும் படிக்க வைக்க தக்க அறிவுரைகள் வழங்கப்பட்டது. இவை அனைத்தையும் பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் அனைவரும் ஒவ்வொரு பள்ளியாக சென்று ஆய்வு செய்து மாதம் 2 முறை அறிக்கைகள் சமர்ப்பிக்க அறிவுறுத்தப்ப ட்டுள்ளது.

    இந்நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் முத்தையா அலுவலர்கள், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

    • தென்னை சாகுபடி குறிப்புகள் மற்றும் ஊட்டச்சத்து மேலாண்மை என்ற தலைப்பில், ஒரு நாள் இலவசப் பயிற்சி முகாம் நடைபெற உள்ளது.
    • இதில் பங்கேற்கும் விவசாயிகள் வேளாண் அறிவியல் நிலையத்தில் இன்று மாலை 5 மணிக்குள் முன்பதிவு செய்துக்கொள்ள வேண்டும்.

    நாமக்கல்:

    நாமக்கல் வேளாண் அறிவியல் நிலையத்தின் தலைவர் டாக்டர் வேல்முருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

    நாமக்கல் மோகனூர் சாலை, கால்நடை மருத்துவக் கல்லூரி வளாகத்தில் உள்ள வேளாண் அறிவியல் நிலையத்தில், நாளை காலை, 10 மணிக்கு, தென்னை சாகுபடி குறிப்புகள் மற்றும் ஊட்டச்சத்து மேலாண்மை என்ற தலைப்பில், ஒரு நாள் இலவசப் பயிற்சி முகாம் நடைபெற உள்ளது.

    இப்பயிற்சியில், மண் பரிசோதனையின் முக்கியத்துவம், தென்னை நாற்றாங்கால் பராமரிப்பு, குறுகிய காலத்தில் வளரும் தென்னையின் வகைகள், லாபகரமான முறையில் தென்னை வளர்ப்பு, தென்னை ஊட்டச்சத்து, நீர், களை மற்றும் பூச்சி மேலாண் குறித்து விளக்கம் அளிக்கப்படும்.

    இதில் பங்கேற்கும் விவசாயிகள் வேளாண் அறிவியல் நிலையத்தில் இன்று மாலை 5 மணிக்குள் முன்பதிவு செய்துக்கொள்ள வேண்டும். பயிற்சியில் கலந்து கொள்ள வரும் விவசாயிகள் கட்டாயம் தங்களின் ஆதார் எண்ணை பதிவு செய்ய வேண்டும்.

    இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • எண்ணும் எழுத்தும் திட்டமானது 1-ம் வகுப்பு முதல் 3-ம் வகுப்பு வரை செயல்படுத்தப்பட்டு வருகிறது.
    • 4 மற்றும் 5-ம் வகுப்பு கற்பிக்கும் ஆசிரியர்களுக்கான பயிற்சி நடைபெற்றது.

    உடுமலை :

    உடுமலை தாலுகாவில் திருமூர்த்திநகர், மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம், உடுமலை வட்டார வள மையம் ஆகியோரது ஒருங்கிணைப்பில் உடுமலை பாரதியார் நூற்றாண்டு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, தளி ரோட்டில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி ஆகிய இடங்களில் எண்ணும் எழுத்தும் பயிற்சி நடைபெற்றது. 2022 -ம் கல்வி ஆண்டில் கொரோனா பேரிடரால் ஏற்பட்ட கற்றல் இழப்பை சரி செய்யும் வகையில் எண்ணும் எழுத்தும் திட்டமானது தமிழக அரசால் அறிமுகப்படுத்தப்பட்டு 1-ம் வகுப்பு முதல் 3-ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    செயல்பாடுகளின் மூலமாக பாட கருத்தினை கற்பித்து கற்றல் விளைவினை ஏற்படுத்தும் வகையில் ஆசிரியர்களுக்கான பயிற்சி கையேடும், மாணவர்களுக்கு பயிற்சி நூல்களும் வழங்கப்பட்டு எண்ணும் எழுத்தும் திட்டமானது செயல்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் சட்டமன்ற கூட்டத் தொடரில் 4 மற்றும் 5-ம் வகுப்பு மாணவர்களுக்கும் எண்ணும் எழுத்தும் திட்டமானது 2023-2024 -ம் கல்வி ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டது.

    இதற்காக 4 மற்றும் 5-ம் வகுப்பு கற்பிக்கும் ஆசிரியர்களுக்கான பயிற்சி நடைபெற்றது. உடுமலையில் நடைபெற்ற பயிற்சியை உடுமலை வட்டார கல்வி அலுவலர்கள் சரவணகுமார், ஆறுமுகம், மனோகரன் ஆகியோர் தொடங்கி வைத்தனர். அதைத்தொடர்ந்து ஆங்கிலம், தமிழ் பாடத்திற்கு நடைபெற்ற பயிற்சியை சென்னை மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன உதவி பேராசிரியர் ராமலிங்கம் பார்வையிட்டு ஆய்வு செய்ததுடன் எண்ணும் எழுத்தும் திட்டத்தின் குறிக்கோள்கள் மற்றும் செயல்பாடுகள் பற்றி ஆசிரியர்களிடம் எடுத்து உரைத்தார். திருமூர்த்தி நகர் மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வர் சங்கர், முதுநிலை விரிவுரையாளர்கள் பாபி இந்திரா, சுப்பிரமணியம் பயிற்சியைப் பற்றி விரிவாக எடுத்துக் கூறினார்கள்.

    இறுதியாக வட்டார வளமைய ஆசிரியர் ராம் பிரசாத் நன்றி கூறினார். வட்டார ஆசிரியர்கள் ஜனகம், ஜெயந்தி, ரேணுகாதேவி, புஷ்பம், சரஸ்வதி, செந்தில் நாயகி, கிருஷ்ணகுமார், சத்யராஜ் உள்ளிட்ட ஆசிரியர்கள் பயிற்சியில் கருத்தாளர்களாக செயல்பட்டனர். பயிற்சிக்கான ஏற்பாடுகளை வட்டார வளமைய ஆசிரிய பயிற்றுநர்கள் செய்து இருந்தனர்.

    • வெப்பம் அதிகமாக உள்ள காரணத்தால் தொடர்ந்து தீ விபத்துகள் நிகழ்ந்தன
    • பல்வேறு வகையான மீட்பு முறைகள் பற்றிய பயிற்சி அளிக்கப்பட்டது.

    நாகர்கோவில் :

    கோடை காலங்களில் வனப்பகுதியில் தீ விபத்து ஏற்பட்டு வருகிறது. குறிப்பாக டிசம்பர் மாத தொடக்கத்தில் இருந்து மே மாதம் வரை வனப்பகுதியில் தொடர்ச்சியாக தீ விபத்து நிகழ்வது வாடிக்கையாக உள்ளது. மழை அதிகமாக இருக்கும் சமயங்களில் தீ விபத்து நிகழ்வதில்லை.

    இந்த ஆண்டு வெப்பம் அதிகமாக உள்ள காரணத்தால் தொடர்ந்து தீ விபத்துகள் நிகழ்ந்தன. இதுபோன்ற தீ விபத்துகளை தடுக்கும் வகையிலும், தீ விபத்து ஏற்படும் இடங் களில் உடனடியாக அதை கட்டுப்படுத்தி மேலும் பரவாமல் தடுக்கும் வகை யிலும் வனத்துறை தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் வனத்துறையினருக்கு தீ தடுப்பு உபகரணங்கள் தமிழக அரசு உத்தரவின் பேரில் வழங்கப்பட்டுள்ளது.

    பயர் லைன் அமைப்ப தற்கான காற்று அடிப்பான் கருவி, புகை தடுப்பு கண்ணாடி கள், தீக்கவச உடைகள், தீ கவச காலணி கள் உள்ளிட்டவை வழங்கப் பட்டுள்ளன.

    இதன் அடுத்த கட்டமாக தீயணைப்பு துறை சார்பில், வனத்துறையின ருக்கு தீ தடுப்பு பயிற்சி அளிக்கப்படுகிறது. அதன் படி கீரிப்பாறை வன அலுவலகத்தில் வனவர்கள், வன காவலர்கள் மற்றும் வன பணியாளர்களுக்கு கோடை காலத்தில் ஏற்படும் காட்டு தீயை எவ்வாறு கட்டுப்படுத்துவது மற்றும் பல்வேறு வகையான மீட்பு முறைகள் பற்றிய பயிற்சி அளிக்கப்பட்டது. மாவட்ட தீயணைப்பு அலுவலர் சத்யகுமார் தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில் மாவட்ட வன அலுவலர் இளைய ராஜா, தீயணைப்பு துறை உதவி மாவட்ட அலுவலர் இமானுவேல், நாகர்கோவில் தீயணைப்பு நிலைய உதவி மாவட்ட அலுவலர் துரை, அழகிய பாண்டிபுரம் வனச்சரகர் மணிமாறன் மற்றும் தீய ணைப்பு துறை யினர் கலந்து கொண்டனர்.

    • 3-வது தளத்தில் இருந்து போலீஸ் கமிஷனர் கயிறு கட்டி இறங்கினார்
    • அனைத்து போலீஸ் நிலையங்களில் இருந்தும் 30 போலீசார் தேர்வு செய்யப்பட்டனர்.

    கோவை,

    மர்ம நபர்களால் யாராவது கடத்தப்பட்டா லோ, தீவிரவாதிகளால் மால்கள், ஓட்டல்களில் பிணைக்கைதியாக அடைக்கப்படுதல் போன்ற சம்பவங்கள் நடக்கும்போது, சம்பவ இடத்துக்கு சென்று, பாதிக்கப்பட்டோரை மீட்க சிறப்பு பயிற்சிகள் தேவைப்படுகின்றது.

    இந்த பயிற்சியை, கோவை மாநகர போலீசாருக்கு அளிக்க கமிஷனர் பாலகிருஷ்ணன் உத்தரவிட்டார். அதன்படி அனைத்து போலீஸ் நிலையங்களில் இருந்தும் 30 போலீசார் தேர்வு செய்யப்பட்டனர்.

    அவர்களுக்கு எஸ்.டி.எப். குழுவினர் பயிற்சி அளித்தனர். அவர்கள் போலீசாருக்கு அடுக்குமாடி கட்டிடங்களில் கயிற்றின் மூலம் மேலே ஏறுவது, , அங்கிருந்து கயிற்றின் மூலம் விரைவாக கீழே இறங்குவது, ஆட்களை மீட்டு கொண்டு வருதல், பிணைக்கைதியாக பிடிபட்டவர்களை மீட்பது போன்ற பயிற்சிகள் அளிக்கப்பட்டது.

    மேலும் துப்பாக்கிகளை கையாளுவது பற்றியும் பயிற்சி அளிக்கப்பட்டது. இந்த பயிற்சி கடந்த 3 நாட்களாக நடந்து வந்தது. அதன் நிறைவு நாள் நிகழ்ச்சி நேற்று நடந்தது. அதில் பயிற்சி பெற்ற போலீசார், தாங்கள் கற்றுக்கொண்ட திறமைகளை வெளிப்ப டுத்தினர்.

    அதனை போலீஸ் கமிஷ்னர் பாலகிருஷ்ணன் பார்வையிட்டார். அதன் பின்னர் அவர் அடுக்கு மாடி கட்டிடத்தின் மூன்றாவது தளத்தில் இருந்து கயிறு மூலம் கீழே இறங்கி போலீசாரை உற்சாகப்படுத்தினார்.

    இதுகுறித்து போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் கூறும்போது, கயிறு மூலம் அடுக்கு மாடி கட்டிடங்களில் ஏறி, இறங்கும் பயிற்சி, போலீசில் சேர்ந்தபோது அளிக்கப்பட்டது. அதை வெளிப்படுத்தும் வாய்ப்பாக, கோவையில் நடந்த இந்த பயிற்சி அமைந்தது என்றார்.

    நிகழ்ச்சியின் முடிவில் போலீஸ் கமிஷனர் பயிற்சி பெற்ற போலீசார் மற்றும் எஸ்.டி.எப்., குழுவினருக்கு நினைவு பரிசினை வழங்கினார். 

    • பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 மாணவர்கள், போட்டித்தேர்வுகளில் வெற்றி பெற தீவிர பயிற்சி மேற்கொள்ள வேண்டியதுள்ளது.
    • சனிக்கிழமைகளில் பயிற்சி வழங்க, ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

    திருப்பூர் :

    பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 மாணவர்கள், போட்டித்தேர்வுகளில் வெற்றி பெற தீவிர பயிற்சி மேற்கொள்ள வேண்டியதுள்ளது. ஏழை மாணவர்கள் தனியார் மையங்களில் பயில, போதுமான பொருளாதார வசதி இருப்பதில்லை.இவர்களுக்கு உதவும் வகையில், கல்வித்துறையும், பயிற்சிகள் அளிக்க திட்டமிட்டுள்ளது. இதற்கான நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது.

    இந்நிலையில் போட்டித்தேர்வுகளுக்கு அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 வகுப்பில் பயிலும் மாணவர்களுக்கு, வாரத்தில் சனிக்கிழமைகளில் பயிற்சி வழங்க, ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒன்றியத்திற்கு ஒரு மையம் வீதம் 412 பயற்சி மையங்கள் ஏற்கனவே செயல்பாட்டில் உள்ளன.

    அதன்படி திருப்பூர் மாவட்டத்தில், பிளஸ் 2 வகுப்பு மாணவர்கள், பிளஸ் 1 வகுப்பில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையிலும், (அதிகபட்சம் 50 மாணவர்கள் ஒரு ஒன்றியத்துக்கு), பிளஸ் 1 வகுப்பு மாணவர்கள், 10-ம்வகுப்பில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையிலும் (ஒரு ஒன்றியத்துக்கு அதிகபட்சம், 20 மாணவர்கள்) தேர்வு செய்யப்படவுள்ளனர்.

    இது குறித்து திருப்பூர் மாவட்ட கல்வித்துறை அதிகாரிகள் கூறியதாவது :- மாணவர்களில், ஓ.சி., மற்றும் ஓ.பி.சி., பிரிவை சார்ந்தவர்களுக்கு 60 சதவீத மதிப்பெண்களும், எஸ்.சி., எஸ்.டி., பிரிவில் 50 சதவீத மதிப்பெண்களாக கொண்டு, பிளஸ் 2 வகுப்பில் 50 சதவீத மாணவர்களும், பிளஸ் 1 வகுப்பில், 20 மாணவர்களும் தேர்வு செய்யப்பட்டு கல்வித்துறை சார்பில் பயிற்சி வழங்கப்படவுள்ளது.

    2017-18, 2018-19, 2019-20ம் கல்வியாண்டுகளில் மாவட்ட அளவில் பயிற்சி பெற்ற பாட ஆசிரியர்கள் மைய ஒருங்கிணைப்பாளராக இருப்பர். இந்த வாய்ப்பை பிளஸ் 2 மற்றும் பிளஸ் 1 பயிலும் மாணவ, மாணவிகள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.இந்த பயிற்சியின் வாயிலாக போட்டித்தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெற முடியும் என்றனர்.  

    • குமரி மாவட்டத்தில் நாளை தொடங்குகிறது
    • அமைச்சர் மனோ தங்கராஜ் தகவல்

    நாகர்கோவில்:

    இந்தியா முழுவதும் கோடிக்கணக்கான இளை ஞர்கள் வேலைவாய்ப்பை எதிர்பார்த்து காத்திருக்கி ன்றனர். தமிழகத்தில் பல தனியார் நிறுவனங்களில் ஏராளமான பணி வாய்ப்பு கள் காணப்படுகின்றன. அந்த நிறுவனங்கள் திறன் படைத்த தகுதியான பணியாளர்களைத் தேடி வருகின்றனர்.

    இந்த இடைவெளிக்கு காரணம், நிறுவனங்கள் எதிர்பார்க்கும் நவீன தொழில்நுட்பத்திறன் மற்றும் மென்திறன்கள் இளைஞர்களிடம் குறைவாக இருப்பதே ஆகும். எனவே, வேலை யில்லா பட்டதாரிகள், மாற்றுத்திறனாளிகள், விதவைகள் போன்றோ ருக்கு தொழில்நுட்பத்திறன் மற்றும் மென்திறன்களை நிறுவனங்களின் எதிர்பார்ப்புக்கு ஏற்ப தரம் உயர்த்திப் பயிற்சியளித்து தனியார் நிறுவனங்களில் நல்ல ஊதியத்துடன் கூடிய பணியில் அமர்த்திட தமிழக அரசு திட்டம் தீட்டியுள்ளது.

    தமிழக தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறையின் கீழ் உள்ள ஐ.சி.டி அகெடமி முதற்கட்டமாக, குமரி மாவட்டத்தில் 1750 பேருக்கு பயிற்சி அளிக்க உள்ளது. அவர்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்தி கொடுக்கும் பயிற்சி திட்டம் நாளை (6-ம் தேதி) சுங்கான்கடை செயின்ட் சேவியர்ஸ் பொறியியல் கல்லூரி வளாகத்தில் தொடங்க இருக்கிறது.

    இந்த திட்டத்தில் தகவல் தொழில்நுட்பம், மென்பொருள் தயாரிப்பு. மார்கெட்டிங். நிதித்துறை, உற்பத்தி பிரிவு உட்பட்ட பல தர பணிகளுக்கும் அவரவர் கல்விப்பின்னணி மற்றும் துறை ஆர்வத்திற்கேற்ப 45 நாட்கள் வல்லுநர்களால் பயிற்சி அளிக்கப்படும்.

    இதில் தொழில்நுட்ப திறன் மற்றும் தனிநபர் மென்திறன்கள் மேம்பா ட்டிற்கான பயிற்சி வழங்க ப்படும். பயிற்சிக்கு பின், அந்தந்த துறை சார்ந்த நிறுவனங்களில் நேர்காணலுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு வேலை கிடைப்பதற்கான முழு வழி காட்டலும் வழங்கப்படும். முற்றிலும் இலவசமாக வழங்கப்படும் இப்பயிற்சி யில் சேர 2018-ம் ஆண்டு மற்றும் அதற்கு பின் பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்று வேலை தேடும் அனைவரும் விண்ணப்பிக்கலாம். ஆர்வமுடையோர். நாளை கங்கான்கடை செயின்ட் சேவியர் பொறியியல் கல்லூரியில் நடைபெறும் தொடக்க நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தங்கள் விபரங்களைப் பதிவு செய்து கொள்ளலாம்.

    மேற்கண்ட தகவலை அமைச்சர் மனோ தங்கராஜ் செய்திக்குறிப்பு ஒன்றில் தெரிவித்துள்ளார். 

    • தனி வகுப்பறை ஒதுக்கப்பட்டுள்ளது.
    • ஆசிரியர்கள் சுழற்சி முறையில் பயிற்சி வகுப்பை நடத்த பணியமர்த்தப்பட்டுள்ளனர்.

    உடுமலை :

    அரசு பள்ளிகளில் ' கல்வியில் பின்தங்கிய மாணவர்களைக்கண்டறிந்து, அவர்களுக்கு அடிப்படை கல்வி மற்றும் பயிற்சி வகுப்பை நடத்த பள்ளிக் கல்வித்துறை அறிவுறுத்தி உள்ளது.அந்த வரிசையில், உடுமலை கல்வி மாவட்ட அரசுப்பள்ளிகளில் இதற்கென, தனி வகுப்பறை ஒதுக்கப்பட்டு 1 முதல் 8 வரையிலான வகுப்புகளில் உள்ள மாணவர்களுக்கு எழுதவும், படிக்கவும் பயிற்சி அளிக்கப்படுகிறது.

    குறிப்பாக அவர்களுக்கு, தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் முழுமையாக வாசிக்கவும், எழுதவும் பயிற்சி அளிக்கப்படுகிறது. அதேபோல அடிப்படை கணிதம் குறித்தும் பயிற்றுவிக்கப்படுகிறது.இதற்கென, ஆசிரியர்கள் சுழற்சி முறையில் பயிற்சி வகுப்பை நடத்த பணியமர்த்தப்பட்டுள்ளனர். இந்த பயிற்சி வகுப்பின் செயல்பாடு குறித்து ஆய்வு நடத்தப்பட்டும் வருகிறது. இது குறித்து கல்வித்துறை அதிகாரிகள் கூறியதாவது:- மாணவர்கள் சிலர் வாசிக்கவும், எழுதவும் தெரியாமல் உள்ளனர். கூட்டல், கழித்தல் என கணிதத்தின் அடிப்படை கற்றலிலும் மிகவும் பின்தங்கி உள்ளனர்.இவர்களுக்கு அடிப்படை பயிற்சி வகுப்பு அவசியமாக உள்ளது.அதன்பேரில் 1 முதல் 8 வரையிலான வகுப்புகளில் கற்றல் திறனில் மிகவும் பின்தங்கிய மாணவர்களுக்கு தனி வகுப்பறை ஒதுக்கி அடிப்படை பயிற்சி வகுப்பு நடத்தப்படுகிறது.

    இந்த பயிற்சி வகுப்பின் செயல்பாடு, மாணவர்களின் கற்றல் திறனை கண்டறிய பள்ளித் தலைமையாசிரியர்கள் மற்றும் பட்டதாரி ஆசிரியர் அடங்கிய குழுவினர் ஆய்வு நடத்தி வருகின்றனர்.அதன்படி உடுமலை கல்வி மாவட்டத்தில் தலைமையாசிரியர்கள் மாரியப்பன், ஆர்.பழனிசாமி, கே.பழனிசாமி, உமா, அழகுமலைக்கண்ணன், இந்துமதி, முருகன், நாகேஸ்வரி, ஆசிரியர்கள் வெண்ணிலா, மாலா, லலிதாம்பாள், கிருஷ்ணவேணி, திருநீலகண்டன், எம்.கல்பனா, வி.கல்பனா ஆகியோர் ஆய்வு நடத்துகின்றனர் என்றனர். 

    • பாடப்புத்தகங்கள் வழங்கும் பணி தீவிரம்.
    • ‘இல்லம் தேடி கல்வி மையம்” மூலம் மாலைநேர சிறப்பு பயிற்சி வகுப்புகள் நடந்தன.

    மதுரை

    தமிழகத்தில் கடந்த மாதம் 14-ந் தேதி பொது தேர்வு முடிந்து கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டது. 1-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை மாணவ- மாணவிகளுக்கு ஜூன் 13-ந் தேதி (நாளை) முதல் பள்ளி திறக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்து இருந்தது.

    மதுரை மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளும் நாளை திறக்கப்பட உள்ளன. ஒரு வாரமாக பள்ளி வகுப்பறைகளை சுத்தம் செய்யும் பணிகள் நடந்தன. பள்ளியில் தூய்மை பணிகள், கட்டிடத்தின் உறுதி நிலை, சீரான மின்இணைப்பு, கழிவு நீர் தொட்டிகளை மூடுதல் ஆகிய பணிகளை தலைமை ஆசிரியர் மேற்பார்வையில் ஊழியர்கள் செய்தனர்.

    மதுரை மாவட்டத்தில் 2 ஆயிரத்து 166 பள்ளிக்கூ டங்கள் உள்ளன. இங்கு 5 லட்சத்து 15 ஆயிரத்து 276 மாணவ- மாணவிகள் படித்து வருகின்றனர். நாளை பள்ளி திறக்கும் நாள் அன்றே பாடபுத்தகங்கள் வழங்குவதற்கான ஏற்பாடு கள் நடந்து வருகின்றன. அன்றைய தினமே புதிய மாணவர் சேர்க்கையும் நடக்கிறது.மதுரை மாவட்டத்தில் 1-10ம் வகுப்பு மாணவ- மாணவிகளுக்கு காலை 9.10 முதல், மாலை 4.10 வரை வகுப்புகள் நடத்தப்பட உள்ளன. 11, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு காலை 9 முதல் மாலை 4 வரை வகுப்புகள் நடைபெறும்.

    பள்ளிக்கூடங்களுக்கு கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டபோதிலும் 'இல்லம் தேடி கல்வி மையம்" மூலம் மாலைநேர சிறப்பு பயிற்சி வகுப்புகள் நடந்தன. மாணவர்கள் கல்வி கற்பதில் தயக்க நிலை- இடையூறு இருக்காது என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    ×